தவேப வேளாண் இணைய தளம் ::பயிர் வகைகளில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு
Goat

வெள்ளாடு வளர்ப்பு
நம் நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள், நிலமற்றவர்களின் பொருளாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மேம்படுத்துவதில் வெள்ளாடு ஒரு முக்கியமான அங்கமாக விளங்குகிறது. ஊரகப்பகுதிகளில் உள்ள பெரிய அளவிலான மக்களுக்கு வெள்ளாடு வளர்ப்பு என்பது ஒரு லாபகரமான தொழிலாக உள்ளது. மிகவும் வளம் குன்றிய பகுதிகளில் உள்ள மோசமான சூழ்நிலையில் வளரும் செடிகள்  மற்றும் மரங்களை கொண்டு ஆடுகளை வளர்க்கலாம். இந்தியாவில் உள்ள மேய்ச்சல் மற்றும் வேளாண் சங்கங்கள், வெள்ளாடுகள் கூடுதல் வருமானம் தரக்கூடிய ஆதாரமாகவும், பேரழிவுகளுக்கு எதிராக காப்பீடு செய்யவும் முடியும் ஒரு ஆதாரமாக இருக்கிறது என்று கூறியுள்ளது. திருவிழாக் காலங்களில் கடவுள் முன், பலி கொடுக்க ஆடுகள் பயன்படுத்தப் படுகின்றன. மேலும், வெள்ளாடுகள் பலசமூகங்களில் மத ரீதியாக மிகவும் முக்கியத்துவம் தரப்படுகிறது.
வெள்ளாடுகள் வளர்ப்பிற்கான நன்மைகள்

  • வெள்ளாடு வளாப்புக்கு ஆரம்ப முதலீடு மிகவும் குறைவு.
  • சிறிய உடலமைப்பு, மந்தமான இயல்பு கொண்டவையால், கொட்டில் அமைக்க தேவைப்படுகிறவையும், பராமரிக்கும் சிக்கல்களும் குறைவு.
  • வெள்ளாடுகள் மக்களுடன் நண்பனாக உள்ள விலங்காக இருக்கிறது.
  • வெள்ளாடுகள் தன் இனங்களை விரைவில் இன விருத்தி செய்யக் கூடியவை. வெள்ளாடுகளின் தாய்மைக் காலம் 10-12 மாதத்தில் தொடங்கி, 16-17 மாதங்களில் பால் தர தயாராகின்றன.
  • வறட்சி நிலவும் பகுதிகளில், வெள்ளாடு வளர்ப்பு என்பது பிரச்னைகள் குறைவான ஒரு பண்ணைசார் தொழிலாக விளங்குகிறது.
  • வணிக ரீதியாக உள்ள பண்ணைகளில், ஆண் மற்றும் பெண் ஆடுகள் இரண்டும் சரிசம மதிப்பு கொண்டவை.
  • பல தரப்பட்ட புற்களை மேய வெள்ளாடுகள் தான் மிகவும் ஏற்றது. இவை பலதரப்பட்ட முட்களுடைய புதர்ச் செடிகள், களைகள், பயிர்க் குப்பைகள், மனித உணவிற்கும் போக உள்ள வேளாண் உபரி பொருட்கள் போன்றவைகளை உண்டே உயிர் வாழக் கூடியவை.
  • சரியான பராமரிப்பு கொண்ட பண்ணைகளில், வெள்ளாடுகள் சரியான அளவில் புற்களை மேய்ந்து, சுற்றப்புற சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு இருக்கச் செய்கிறது.
  • ஆடுகளை வெட்டி, இறைச்சிக்குப் பயன்படுத்துவதில், எந்த வித சமூகத்தின் எதிர்ப்போ (அ) தடையோ நம்நாட்டில் இல்லை.
  • சுற்றுப்புற சூழலுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாதவாறு ஆடு வெட்டுதல் மற்றும் சுத்தம் செய்தல், இறைச்சியை கொண்டு செல்லுதல் , ஆகிய செயல்கள் நடைபெறுகிறது.
  • வெள்ளாட்டு இறைச்சி குறைந்த கொழுப்பு கொண்டது. வெயில் காலங்களில் குறைந்த அளவு சக்தி அளிக்கும் உணவாக மக்கள் விரும்புகிறார்கள். சில சமயங்களில்  அதிக மென்று உண்ணும் தன்மையை கொண்டு இருப்பதால் (ஆட்டு இறைச்சி செம்மறியாட்டு இறைச்சியை விட) மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படுகிறது.
  • வெள்ளாட்டுப் பால் எளிதில் ஜீரணமாகக் கூடியது.
  • வெள்ளாட்டுப் பால் சாப்பிடும் உணவு மற்றும் ஜீரணச் சக்தியை அதிகப்படுத்துகிறது. பசும்பாலை விட வெள்ளாட்டுப்பால் அலர்ஜி எதுவும் தராது. இதில் பூஞ்சைக்கு எதிராகவும்) பாக்டீரியாவுக்கு எதிராகவும் உள்ள நன்மைகள் இருப்பதால் பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
  • பகுதி வறண்ட நிலப்பகுதிகளில் செம்மறியாட்டை விட வெள்ளாடுகள் 2.5 அளவு அதகிமாக புற்களை உண்கின்றன.
  • ஊரகப் பகுதிகளில் வாழும் ஏழைகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.
  • வெள்ளாடுகள் ஒரு நடமாடும் குளிர்ப்பதனப் பெட்டி என்று அழைக்கப்படுகிறது. ஒரு நாளில் அதிகளவு பால் தருபவையாகவும், சேமித்து வைக்கவும் முடிகிறது.

வெள்ளாட்டு வளர்ப்பிற்கான வழிமுறைகள்

கொட்டில் மேலாண்மை

  • தரையிலிருந்து சற்றே உயரமான, உலர்வான இடத்தில், கொட்டில் அமைக்கப்படும்.
  • நீர் தேங்காத, சொத சொதப்பான பகதிகளைத் தவிர்க்க வேண்டும்.
  • தாழ்வான மற்றும் அதிக மழை பொழியும் பகுதிகளில், தரைப் பகுதி சற்றே உயர்வாக இருக்க வேண்டும்.
  • குளிர்வான ஹிமாலாய பகுதிகளில் கொட்டிலின் தரைப்பகுதி மரத்தினால் அமைப்பது நல்லது
  • கொட்டிலானது 10 அடி உயரத்தில் மற்றும் நல்ல காற்றோட்ட வசதி கொண்டதாக இருக்க வேண்டும்.
  • ஆண் ஆடுகளை தனியாகக் கொட்டிலில் வைக்க வேண்டும்.
  • பெண் ஆடுகளை குழுவாக, ஒரு கொட்டிலில் 60 என்ற அளவில் வைக்கலாம்.
  • வெயில் காலங்களில் நிழலும், குளிர்ந்த நீரும் சரியான அளவில் தர வேண்டும்.
  • ஆட்டுப் புழுக்கை மற்றும் சிறு நீரை சரியானபடி அகற்ற வேண்டும்.
  • எல்லா ஆடுகளுக்கும் போதுமான அளவு இடம் ஒதுக்கித் தர வேண்டும்.
  • அதிகப்படியான ஆடுகளை ஒரு கொட்டிலில் அடைக்கக் கூடாது.

வெள்ளாட்டு இனங்களை தேர்வு செய்தல் மற்றும் அதன் மேலாண்மை

  • வங்கி கடன் கிடைத்தவுடனேயே நல்ல நிலைமையில் சிறப்பாக உள்ள இனங்களை வாங்க வேண்டும்.
  • நல்ல ஆரோக்கியத்துடன், நல்ல உடற்கட்டுன் உள்ள வெள்ளாடுகளை கால்நடை மருத்துவர் / வங்கி தொழில்நுட்ப அலுவலர் ஆலோசனை பெற்று வாங்க வேண்டும்.
  • நல்ல இனவிருத்தி செய்யக் கூடிய தயார் நிலையில் உள்ள ஆடுகளை வாங்க வேண்டும்.
  • புதிதாக வாங்கிய ஆடுகளை குறிப்பிட்ட அடையாளக் குறியிட வேண்டும்.
  • புதிதாக வாங்கிய ஆடுகளுக்கு நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போட வேண்டும்.
  • புதிதாக வாங்கிய ஆடுகளை தனியே 15 நாட்கள் கண்காணிப்பில் வைத்திருந்து, பின் கொட்டிலில் அடைக்க வேண்டும்.
  • எதற்கும் பயன்படாத ஆடுகளை சரியாக கணித்து அகற்ற வேண்டும். அதற்குப் பதிலாக புதிதாக ஆடுகள் வாங்கி கொட்டிலில் அடைக்க வேண்டும்.
  • அதிக உற்பத்திக்காக ஆடுகளை 8-9 மாத இடைவெளியில் இனவிருத்தி செய்யலாம்.
  • 6 வருடம் மற்றும் அதற்கு மேலாண வயதுடைய ஆடுகளை அகற்றிவிட வேண்டும்.
  • வெயில் மற்றும் குளிர் காலங்களில் குட்டியிடுவதை தவிர்க்க வேண்டும்.

தீவன மேலாண்மை

  1. மேய்ச்சலுக்கு புதர்ச்செடி / சிறுசெடிகளை பராமரிக்க வேண்டும்.
  2. தங்களுடைய பண்ணையிலிருந்து (அ) சுற்றியிருக்கும் பண்ணையிலிருந்து பயிரிடப்பட்ட தீவனபயிர்களை மாற்றாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  3. நார்த்தீவனம் மூலம் 2/3 பகுதி என்ற அளவில் ஆடுகளுக்கு அளிக்க வேண்டும். நார்த்தீவனத்தின் பகுதி பயிறுவகையைச் சேர்ந்த பசும்தீவனமாகவும், பகுதி புற்கள் /இளம் பசும் இலைகளாகவும்  அளிக்கலாம்.
  4. நல்ல தரமான பசும் தீவனங்கள் கிடைக்காத பொழுது, அடர்தீவனங்களை மாற்றாக அளிக்கலாம்.
  5. 5 வயதுடைய குட்டிகளுக்கு கொலஸ்ட்ரம் தரலாம். பின் குட்டிகளுக்கு ஆரம்ப உணவு அளிக்கலாம்.
  6. பயிறு வகையைச் சேர்ந்த பசும்தீவனத்தை 15 நாட்கள் முதல் தரலாம்.
  7. எல்லா நேரங்களிலும் உப்பு கலந்த நீரை குட்டிகளுக்குத் தரலாம்.
  8. இனப்பெருக்க காலத்தின் போது, பெண் மற்றும் ஆண் ஆடுகளுக்கு கூடுதல் அடர்தீவனம் தரவேண்டும்.
  9. பரிந்துரைக்கப்பட்ட படி, ஊட்டச் சத்து தேவைகளை அளிப்பதில்  மிகுந்த கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு தருதல்

  1. குறைந்த அளவு உணவு எடுத்துக் கொள்ளுதல், அசாதாரணமாக நடந்து கொள்ளுதல் போன்றவை எல்லாம் ஆடுகள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதற்கான அறிகுறிகளாகும். அதைக் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
  2. ஏதாவது உடல்நிலை சாயில்லாதவாறு தெரிந்தால், உடனடியாக கால்நடை மருத்துவரின் உதவியை நாடவேண்டும்.
  3. நோய்கள் எதுவும் தாக்காதவாறு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
  4. ஏதும் பெரிய அளவில் நோய் தென்பட்டால், மற்ற ஆடுகளிடமிருந்து தனித்து வைத்திருக்க வேண்டும்.
  5. ஆடுகளுக்கு வயிறை சுத்தம் செய்யும் மருந்தை சீராக தந்து கவனிக்க வேண்டும்.
  6. சுத்தமான, மாசுபடாத உணவு மற்றும் நீரை தர வேண்டும்.
  7. தடுப்பூசி மருந்து அட்டவணைப்படி பரிந்துரைக்கப்பட்டவைகளை போட வேண்டும்.
  1. இனவிருத்தியின் போது கவனித்தல்
  2. 2 வருட காலங்களில் 3 குட்டிகளை இடுமாறு திட்டமிட்டப்படி சூழ்நிலைகளை உருவாக்கித் தரவேண்டும்.
  3. 25 பெண் ஆடுகளுக்கு ஒரு ஆண் ஆடு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  4. இனவிருத்தி செய்ய முடியாத ஆடுகளைக் கண்டறிந்து, மருத்துவரின் ஆலோசனைப்படி அகற்றிவிட வேண்டும்.

கர்ப்பக்கால கவனிப்பு
கர்ப்பக்காலத்தின் முன்னேற்றக் காலத்தில், பெண் ஆடுகளை பிரசவிக்கும் கொட்டில் அல்லது கொட்டிலிலேயே அதற்கென ஒரு இடம் ஒதுக்கி வைக்க வேண்டும். குட்டி பிறந்தவுடன் 2 நாட்களுக்கு, பெண் ஆடுகளுக்கு இளம் சூடான உமித்தூள் பரப்பி வைத்திருக்க வேண்டும்.

  1. குட்டிகளை கவனித்தல்
  2. புதிதாகப் பிறந்த குட்டிகளை அதிகக் கவனிப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  3. நஞ்சுக் கொடியை அகற்றிய இடத்தில் அயோடின் கொண்டு தடவ வேண்டும்.
  4. முதல் 2 மாதங்களுக்கு, குட்டிகளை மோசமான காலநிலைகளிலிருந்து பாதுகாத்து வைக்க வேண்டும்.
  5. முதல் 2 வாரங்களுக்கு குட்டிகளுக்கு கொம்பை அகற்ற வேண்டும்.
  6. நல்ல மட்டன் உற்பத்திக்காக ஆண் குட்டிகளுக்கு விறைநீக்கம் செய்ய வேண்டும்.
  7. பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி அட்டவணைப்படி குட்டிகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்.
  8. 8 வாரம் இருக்கும் போது குட்டிகளை பால்குடி மறக்க செய்ய வேண்டும்.

சந்தைப்படுத்துதல்
சதைப்புள்ள, குண்டான குட்டி ஆடுகள், அதனுடைய புழுக்கை, வளர்ந்த ஆடுகளை விற்பனை செய்யலாம். ஆடு வெட்டுமிடம், தனிப்பட்ட இறைச்சி உண்ணும் நபர்கள் இருக்கும் இடங்கள், வேளாண் பண்ணைகளில் இவற்றை விற்கலாம். அதனால் ஆடு வெட்டுமிடம் வசதி, அல்லது உயிருடன் உள்ள ஆடுகளை வாங்கும் வியாபாரிகள் உள்ள இடத்தில் விற்கலாம். வேளாண் பண்ணைகளுக்கு ஆட்டின் புழுக்கையும் அதிகளவில் தேவைப்படுகிறது.

இந்தியாவில் உள்ள வெள்ளாடுகளின் எண்ணிக்கை


வ.எண்

மாநிலங்கள் / யூனியன் பிரதேங்கள் (மாநிலங்கள் வாரியாக)

மொத்தம் (ஆயிரங்களில்)

1.

ஆந்திர பிரதேசம்

5213

2.

அருணாச்சலப் பிரதேசம்

154

3.

அஸ்ஸாம்

2717

4.

பீகார்

20229

5.

சட்டீஸ்கர்

2154

6.

கோவா

13

7.

குஜராத்

4386

8.

ஹரியானா

968

9.

ஹிமாச்சல் பிரதேசம்

1168

10.

ஜம்மு & காஷ்மீர்

1864

11.

கர்நாடகா

4875

12.

கேரளா

1598

13.

மத்தியப் பிரதேசம்

6470

14.

மகாராஷ்டிரா

11434

15.

மணிப்பூர்

33

16.

மேகாலயா

280

17.

மிசோரம்

15

18.

நாகலாந்து

161

19.

ஒரிசா

5772

20.

பஞ்சாப்

414

21.

இராஜஸ்தான்

16971

22.

சிக்கிம்

80

23.

தமிழ்நாடு

6416

24.

திரிபுரா

639

25.

உத்திரப் பிரதேசம்

11784

26.

உத்தராஞ்சல்

1070

27.

மேற்கு வங்காளம்

15468

 

யூனியன் பிரதேசங்கள்

 

28.

அந்தமான் & நிக்கோபர் தீவுகள்

71

29.

சண்டிகர்

1

30.

தாத்ரா & நகேலி

20

31.

டாமன்  & டையூ

5

32.

டெல்லி

25

33.

லட்சத்தீவு

26

34.

பாண்டிச்சேரி

41

 

மொத்தம்

122721

வெள்ளாடு வளர்ப்பிற்கு ஆகும் செலவு


வ.எண்

விபரங்கள்

அளவீடுகள்

எண்ணிக்கை

ஒரு எண்ணிக்கையின் விலை (ரூ/பகுதி)

மொத்தம்
(ரூ)

1.

கொட்டில்

பெண் ஆடுகள் 10 /சதுர அடி /ஆடு (மேயப்பட்ட கூரை)

50

35

28,420

 

 

ஆண் ஆடு – 20 சதுர அடி / ஆடு

 

 

 

 

 

குட்டிகள் 4 சதுர அடி /குட்டி
(மேயப்பட்ட கூரை)

 

 

 

2.

உபகரணங்கள்

-

52

10

520

3.

ஆடுகளுக்கான விலை

பெண் ஆடு

50

1600

80000

ஆண் ஆடு

2

2200

4400

4.

காப்பீடு

பெண் ஆடு

50

44

3200

 

 

ஆண் ஆடு

2

44

176

5.

மருத்துவ உதவி

 

52

20

1040

6.

தீவனப் பயிர் சாகுபடி

2 ஏக்கர் / பருவம் & மூன்று பருவங்கள்

2

-

9000

7.

இணை உணவுகள்

பெண் ஆடுகள் – 6.75 கிலோ / மாதம் – மூன்று மாதங்களுக்கு

50

5

5063

 

 

ஆண் – 7.5 கிலோ / மாதம் – 3 மாதங்களுக்கு

2

1

225

 

 

குட்டிகள் – 3.25 கிலோ /மாதம் – 6 மாதங்களுக்கு

64

1

1200

8.

ஆட்கூலி

-

1

1250

15000

9.

தண்ணீர், மின்சாரம் மற்றும் இதரச் செலவுகள்

-

52

10

520

10.

மொத்தவிலை

-

-

-

148764

11.

மொத்தவிலையில் 15% வரம்பு

-

-

-

22315

12.

மொத்தவிலையில் 85% நிதி வங்கி கடன்

-

-

-

126449

வெள்ளாடு வளர்ப்பிற்கு ஆகும் செலவு – தொழில்நுட்ப பொருளாதார அளவீடுகள்


வ.எண்

அளவீடுகள்

 

1.

ஆண் ஆடுகளின் எண்ணிக்கை

2

2.

பெண்ஆடுகளின் எண்ணிக்கை

50

A.

உற்பத்திக்கான தனிப்பண்புகள்

 

(I)

வளர்ச்சியடையும் வயது (மாதங்கள்)

10-12

(ii)

குட்டியிடும் இடைவெளி (மாதங்கள்)

8

(iii)

குட்டியிடும் சதவீதம்

85

(iv)

இரட்டைக் குட்டி பிறப்பு சதவீதம்

60

(v)

ஒரு வருடத்திற்கு குட்டிப் போடும் எண்ணிக்கை

1.5

(vi)

இன விகிதம்

1:1

(vii)

இறப்பு விகிதம் (%)

 

 

வளர்ந்த ஆடுகள்

5

 

குட்டிகள்

15

(viii)

குட்டிகளை விற்கும் வயது  (மாதங்கள்)

8-9

(ix)

2 ஆண்டிலிருந்து வயது முதிர்ந்த ஆடுகளை தரப்பகுப்பு செய்தல் (%)

20

B.

செலவுக்கான அடிப்படைகள்

 

(I)

தேவைப்படும் இடம் சதுர (அடி)

20

 

ஆண் ஆடு

20

 

பெண் ஆடு

10

 

குட்டிகள்

4

(ii)

கொட்டில் அமைக்க ஆகும் செலவு (ரூ/ச.அடி)

35

(iii)

உபகரணங்களுக்கு ஆகும் செலவு (ரூ/ வளர்ந்த ஆடு)

10

(iv)

a). தீவனப்பயிர் சாகுபடிக்கு ஆகும் செலவு (ரூ. /ஏக்கர் / பருவம்)

1500

 

b).தேவைப்படும் ஏக்கர்

2

(v)

அடர் தீவனம்

 

 

வளர்ந்த பெண் ஆடுகள் ( இனவிருத்தி ஒரு மாதத்திற்கு முன் & குட்டி போட்டு ஒரு மாதத்திற்கு பிறகு)

6.75 கிலோ / மாதம்

 

ஆண் ஆடுகள் ( ஒவ்வொரு இன விருத்தியின் போது 2 மாதங்கள்)

7.5 கிலோ / மாதம்

 

குட்டிகள் (30 நாட்களுக்கு)

3.75 கிலோ/ குட்டி

(vii)

அடர் தீவனத்திற்கான விலை (ரூ/கிலோ)

5

(viii)

ஆட்கள் (எண்ணிக்கை)

1

 

ஆட்கூலி (ரூ / மாதம்)

1250

(ix)

காப்பீடு

4

(x)

மருத்துவ உதவி (ரூ /வளர்ந்த ஆடு / வருடம்

20

(xi)

தண்ணீர், மின்சாரம் மற்றும் இதரச் செலவுகள் (ரூ /வளர்ந்த ஆடு)

10

C

வரவுப்படிகள்

 

1.

ஆண் ஆடுகளை விற்றல் (ரூ/குட்டி)

10000

2.

பெண் ஆடுகளை விற்றல் (ரூ/குட்டி)

900

3.

தரப்பகுப்பு செய்யப்பட்ட பெண் ஆடுகளை விற்றல் ( ரூ/பெண் ஆடு)

1200

4.

தரப்பகுப்பு செய்யப்பட்ட ஆண் ஆடுகளை விற்றல் ( ரூ/ஆண் ஆடு)

1500

5.

பெண்/ஆண் குட்டிகளை விற்றல் (ரூ/குட்டி)

600

6.

சாக்குப் பைகளை விற்றல் (ரூ/பை) (13.3 பைகள் /டன்)

10

D

திரும்பச் செலுத்தும் படிகள்

 

1.

திரும்பச் செலுத்தும் காலம் (வருடங்கள்)

6

2.

காலக்கெடு (வருடங்கள்)

1

3.

வட்டி விகிதம் (%)

12

ஆடுகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து (சதவீதத்தில்) அல்லது 1 கிலோ உலர் தீவனத்திற்கான விலை


வ.எண்

ஆடுகளின் வகைகள்

உடல் எடை (கிலோ)

டைகால்சியம் பாஸ்பேட் (%)

மொத்த கரையும் ஊட்டச்சத்து (%)

எரிபொருள் சக்தி (%)

கால்சியம் (%)

பாஸ்பரஸ் (%)

1.

வளரும் குட்டிகள்

 

 

 

 

 

 

a).

சிறிய இனவகைகள்

5

12.8

70

2.52

0.23

0.21

 

 

10

10

65

2.34

0.21

0.2

 

 

15

7

65

2.34

0.21

0.2

 

 

20

6

60

2.16

0.2

0.19

 

 

25

5.5

60

2.16

0.2

0.19

b).

பெரிய இனவகைகள்

10

12

70

2.52

0.23

0.21

 

 

15

10

65

2.34

0.21

0.2

 

 

20

7

65

2.34

0.2

0.19

 

 

25

6

60

2.16

0.2

0.19

 

 

30

5.5

60

2.16

0.19

0.18

 

 

35

5

55

1.98

0.19

0.18

2.

கர்ப்பமுடைய பால் கறக்காத பெண் ஆடுகள்

 

 

 

 

 

 

a).

முதல் 15 வார கர்ப்பக் காலம்

25

4.5

50

1.8

0.3

0.23

 

 

30

4

50

1.8

0.27

0.21

 

 

40

4

50

1.8

0.24

0.21

 

 

50

4

50

1.8

0.24

0.19

 

 

60

4

50

1.8

0.22

0.17

b).

கடைசி 6 வார கர்ப்பக் காலம்

25

5

55

1.98

0.27

0.21

 

 

30

5

55

1.98

0.24

0.2

 

 

40

5

55

1.98

0.23

0.17

 

 

50

4.5

53

1.91

0.22

0.16

3.

பால் தரும் நிலையில் உள்ள பெண் ஆடுகள்

 

 

 

 

 

 

a).

முதல் பகுதி பால் தரும்  காலம்

25

6

65

2.34

0.3

0.22

 

 

30

6

62

2.23

0.29

0.21

 

 

40

5

60

2.16

0.28

0.2

 

 

50

5

60

2.16

0.27

0.2

 

 

60

4.5

60

2.16

0.27

0.2

b).

இரண்டாவது பகுதி பால் தரும் காலம்

25

5.5

60

2.16

0.3

0.22

 

 

30

5.5

60

2.16

0.28

0.2

 

 

40

5

55

1.98

0.27

0.19

 

 

50

4.5

55

1.98

0.25

0.18

 

 

60

4.5

55

1.98

0.24

0.17

4.

ஆண் ஆடுகள் – இன விருத்தி செய்யும் ஆடு, வளர்ந்த ஆடு, குட்டிகள்

 

 

 

 

 

 

 

 

25

6.5

65

2.34

0.21

0.19

 

 

30

6

65

2.34

0.2

0.18

 

 

40

5

64

2.3

0.2

0.18

 

 

50

5

60

2.16

0.18

0.16

 

 

60

4.5

55

1.98

0.17

0.15

 

 

70

4

50

1.8

0.16

0.13

 

 

80

4

50

1.8

0.15

0.14

 ஆதாரம் : http://www.nabard.org/

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014